என் குழந்தை

மடியில் தவள்ளும் குழந்தை அவள்

என் விரல்களை கடிக்கும் குழந்தை அவள்

 

ராட்சசன் ஒருவன் கையினிலே-

பெருமைதந்த குழந்தை அவள்

 

வானவர் வேடனும் கொஞ்சுகையில்

சாத்திரம் படைக்கும் குழந்தை அவள்

 

மெஞ்ஞானம் விஞ்ஞானம் பேசும் அவள்

மழலையாய் கொஞ்சும் குழந்தை அவள்

 

வாழ்வின் அவிதியல் சிக்குகையில்

தாயாய் அரவனதைத்த கழந்தை அவள்

 

உன்னை அன்னைக்கும் எப்பொழுதும்

என் ஆசியை நானே கண்ணுக்கு செய்வேன்.

 

என் குழந்தை – என் வீணை