வீணை

மானிட வீணையை என் மனத்தால் மீட்டும்போது

உன் நறும்புகளைப் பார்க்கவில்லை, என் நறும்புகளாய்ப் பார்த்தேன்.

 

சோகத்தில் மூழ்கும்போதும்

கோபத்தில் அழந்தப்போதும்

உன்னை கட்டி அணைக்கையில், என் மனம் குளிர்ந்ததேனோ?

 

உன்னை தீண்டும்போது, நீ என் வாழ்வில் தீப்பந்தமாய் பிரகசித்தாய்

எனக்கும் “ஒருத்தி” பந்தமாய் வந்தாய்- என் தாய்.

 

தாயாய் தந்தையாய் குருவாய் ஆனாய்

காதலியாய் சிலமுறை, மகளாவும் ஆனாய்.

 

ஸ்வரங்களை தடவுகையில், ஒரு வரம் கேட்டேன்

மீண்டும் உன்மேல் என் விரல்கள் படியவேண்டுமென்றே.